லேபிள்கள்

சனி, 6 செப்டம்பர், 2025

கர்மாவின் வினை யாருக்கு போய் சேரும்

 




கர்மாவின் வினை

கர்மாவின் வினை அதன் செயலைச் செய்தவருக்கே போய் சேரும்அதாவது, ஒருவர் செய்த நல்ல அல்லது தீய செயல்களின் விளைவுகள், அதற்கான பலன்களை அந்த நபரே அனுபவிப்பார்கள்

இது தனிநபரின் எண்ணம், செயல், மற்றும் அதற்குப் பதிலளிக்கும் விதம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படும் ஒரு உள் சுழற்சி ஆகும்

கர்மா மற்றும் அதன் விளைவுகள்:

·         செயலும் அதன் விளைவும்:

கர்மம் என்பது வெறும் செயல் மட்டுமல்ல, அதன் விளைவையும் குறிக்கிறதுஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு, அதுவே கர்மாவின் கொள்கையாகும்

·         தனிப்பட்ட பொறுப்பு:

கர்மாவின் சுழற்சி என்பது குற்றம் மற்றும் தண்டனையின் வெளிப்புற அமைப்பு அல்லஅது அவரால் உருவாக்கப்பட்ட உள் சுழற்சியாகும்

·         நோக்கம் மற்றும் செயல்கள்:

ஒருவரின் எண்ணங்களும், அவர் மேற்கொள்ளும் செயல்களுமே அவரின் கர்மாவை பாதிக்கின்றனஎதிர்கால வெகுமதிகளை எதிர்பார்ப்பதோ அல்லது விளைவுகள் குறித்த பயமோ கர்மாவின் சுழற்சியை பாதிக்கலாம்

·         இந்த ஜென்மத்திலும் அடுத்த ஜென்மத்திலும்:

கர்ம வினையின் பலன்கள், இந்த ஜென்மத்திலேயே அனுபவிக்கப்படலாம் அல்லது அடுத்த ஜென்மத்தில் வந்து சேரலாம்

சுருக்கமாக, கர்மா என்பது ஒருவருக்கு மட்டுமே உரியது, அது அவர் செய்யும் செயல்களின் நேரடி விளைவுகளை அவருக்குத் திரும்பக் கொண்டுவரும் ஒரு தத்துவமாகும்


கர்மாவின் வினை யாருக்கு போய் சேரும்
எச்சரிக்கையுடன் பேசவேண்டும்.

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை. விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை. அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை கூறியதோடு நில்லாமல் இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று.

காரணம்:-

உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.

எனவே, மற்றவர்கள் பற்றி பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.


2 கருத்துகள்:

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...