லேபிள்கள்

சனி, 8 நவம்பர், 2025

வாழ்க்கையின் இறுதி ஏழு நாட்கள்

 


 வாழ்க்கையின்  இறுதி ஏழு நாட்கள்

முன்னொரு  காலத்தில் அங்கு   ஒரு ஆஷ்ரமம்  இருந்தது. அந்த  ஆஷ்ரமத்தில், ஒரு குரு தன்னுடைய சீடர்களுக்கு  நன்னெறிகளைப்   போதித்துக் கொண்டு  இருந்தார். அந்த நேரத்தில் ஒரு  அந்நியன்  ஆஷ்ரமத்திற்குள்  வந்தான். அவன்  அந்த குருவை  திட்டத் தொடங்கினான்.    அந்த குரு அந்த  மனிதரைப் பார்த்தார், ஆனால் எதுவுமே பதில் கூறவில்லை.    மேலும் அவர்  முற்றிலும்  அமைதியாக இருந்தார்.      சிறிது நேரத்திற்கு  பிறகு அந்த மனிதன் வெளியே  சென்று விட்டான்.    

அங்கிருந்த  சீடர்களில் ஒருவர்  தன் குருவை  மோசமான  வார்த்தைகளால்  திட்டியதைப் பற்றி  மிகவும் கோபம்  அடைந்தார்.    தன்னுடைய குரு  எந்த வித பதிலும்  அவனுக்குக்  கூறாமல்,    அமைதியாக அவன் திட்டியதைக் கவனித்தமைக்கு,  அந்த சீடர் வியப்பு  அடைந்தார்.    

குருவின் போதனை முடிந்த பிறகு, அந்த சீடர் குருவிடம் சென்று கேட்டார்,“குருஜி, அந்த மனிதர்  கொடூரமான வார்த்தைகளால்  உங்களைத் திட்டினார், மேலும்  உங்களுக்கு சாபம்  இட்டார். அப்போது நீங்கள் ஏன்  அமைதியாக இருந்தீர்கள்?    தயவு செய்து  எனக்கு கூறுங்கள்,    இந்த மாதிரியான சூழ்நிலையில்,  உங்களால் எப்படி இவ்வளவு தூரம்  மிக அமைதியாகவும்,  புன்சிரிப்போடும் இருக்க முடிகிறது?     உங்களை ஒரு துளி அளவு கூட  கோபப்பட வைக்கவில்லையே  அல்லது உங்கள்  முகத்தில் கூட எந்த மாற்றத்தையும்  காட்டவில்லையே,    இதன் ரகசியம் என்ன?

அந்த குரு புன் சிரிப்போடு  பதிலளித்தார், “ நான் நிச்சயமாக  உனக்கு இந்த  ரகசியத்தைக் கூறுவேன்,   ஆனால் முதலில்,  நான் உன்னிடம்   சில முக்கியமான  விஷயத்தை கூறப் போகிறேன்.”

அந்தச் சீடர் வியப்பு  அடைந்தார். அவர் கேட்டார், “அது  என்ன குருஜி?  தயவு செய்து  எனக்குக் கூறுங்கள்”.

அதற்கு குரு பதிலளித்தார், “ஒரு வாரத்திற்குப் பிறகு  நீ மரணம் அடையப் போகிறாய். உனது  வாழ்க்கையின்  முடிவு நெருங்கி  விட்டது”.

இதைக் கேட்டவுடன், அந்த சீடர் பேரதிர்ச்சி  அடைந்தார்.   அவரது  பாதங்களின்  அடியில் இருந்து  பூமியே நழுவி விட்டாற் போல்  இருந்தது.      வேறு யாராவது   இதைக் கூறி இருந்தால், அவர் நம்பி இருக்கவே  மாட்டார். யார் மீது  இவர் முழுமையான பற்றுறுதியும்,  மேலும்  மரியாதையும்  வைத்திருக்கிறாரோ  அந்த குரு கூறி இருக்கிறார்.   எனவே இவர் இது உண்மையானது என்று நம்பினார்.    தான் உயிரோடு  இருப்பது இன்னும்  ஏழு நாட்கள் மட்டுமே .     

அந்த சீடர் மனச் சோர்வுக்கு மிகவும் ஆளானார்.       இந்த மாதிரியான  நம்பிக்கை இழந்த  நிலைமையை  அவரால் தனக்குள்  நினைத்துப் பார்க்க முடியவில்லை.      ஆனால், பிறகு ஒரு கணம்  அமைதியான மனத்தோடு  ஆழமாக சிந்தித்துப் பார்க்கிறார். அந்த  இறுதி  ஏழு  நாட்களையும்  முழுமையாக வாழ வேண்டும் என்ற முடிவுக்குப் பிறகு வருகிறார். தன்  குருவின் ஆசிகளோடு,   ஆஷ்ரமத்தை விட்டுப் புறப்பட்டார்.

அவர் செல்லும் வழியில்  தன்னுடைய எண்ணங்களுக்கு  ஒரு தீர்மானத்தைக் கொண்டு  வருகிறார். தன் வாழ்வின் அந்த  இறுதி ஏழு  நாட்களை எப்படி செலவு செய்திட வேண்டும், என்பதைப் பற்றி  தீர்மானித்தார்.

மிக அதிகமான  ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பிறகு, இறுதியாக அவர் மனதில்  எஞ்சி இருக்கும்  அந்த ஏழு நாட்களை  தனது குருவின் போதனைகளை  பின்பற்றி  பணிவாகவும்,  அன்போடும், மேலும்  கடவுளிடம்  இருக்கும் பக்தியோடும்  வாழ்வதற்கு முடிவு செய்தார். அந்தக்  கணத்திலேயே  அவரது மனநிலை   மிகச் சரியான மாற்றத்தை  அடைந்தது.    

இப்போது அவர் யாரையெல்லாம்  சந்திக்கிறாரோ,  அவர்களிடம் இதயபூர்வமாக  ஆழ்ந்த அன்பைக் காட்டினார்.    மேலும் யார் மீதும் எதற்காகவும்  கோபத்தைக் காட்டுவதே இல்லை.    தன்னுடைய நேரம் முழுவதையும்  தியானம் செய்வதிலும்,   கடவுளின் நிலையான நினைவிலும்  பெரும்பாலும் செலவிட்டார்.    

தன்னுடைய பாவங்களுக்காக  மன்னிப்புக் கேட்டார்.     அறிந்தோ  அறியாமலோ தான் சண்டை  போட்டவர்களிடமும்,  தான்  துன்பப்படுத்தியவர்களிடமும் இந்த சீடர் மன்னிப்புக் கோரினார்.      வழக்கமாக  இவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு, அவர்  கடவுளின்  நிலையான நினைவிலேயே  முற்றிலுமாக  மூழ்கினார்.    இவ்வாறாக ஆறு  நாட்கள் சென்றன.    ஏழாவது நாளன்று,   தன்னுடைய முடிவை  சந்திப்பதற்கு முன்பு,  தன் குருவை  சென்று சந்திக்க வேண்டும் என்று  மனதுக்குள் நினைத்தார்.

அவர் குருவை சென்று சந்தித்து  மேலும் குருவின் பாதங்களில்  விழுந்து  வணங்கினார்.    திருப்தியான  உணர்வு நிறைந்த முகத்தோடு சீடர்  குருவிடம், “குருவே,   என்னுடைய முடிவு  அருகே வந்து  கொண்டு  இருக்கிறது.    மேலும் என்னுடைய  கடைசி கணத்தில்  உங்களுடன் இருக்க விரும்புகிறேன்.     தயவு செய்து  கடைசி முறையாக  எனக்கு உங்கள்  ஆசிகளை வழங்குங்கள்”  என்றார்.

குரு அதற்கு  பதிலளித்தார்,  “என்னுடைய ஆசிகள் எப்போதும்  உன்னுடன்  இருக்கின்றன. நீ   நீண்ட காலம்,   ஆரோக்கியமான வாழ்க்கையை  வாழ்வாயாக”.  J

குறிப்பாக ஏழு  நாட்களுக்கு முன்பு  தன் குருவிடம் இருந்து   கேட்டதற்கும்  இப்போது இந்த  மாதிரியான  ஆசியை தன் குருவின் வாயில்  இருந்து கேட்டவுடன்,   அந்த சீடர்  முற்றிலும் குழப்பம்  அடைந்தார்.

சீடனை ஆசீர்வதித்த பிறகு, குரு சீடரிடம், “ஆகவே என்னிடம் கூறு, கடந்து போன ஏழு நாட்களும்  எப்படி இருந்தன?    முன்பு மாதிரி  இப்போது  மக்களிடம்  கோபப்பட்டாயா? “  என்றார்.     

கைகளை  கூப்பியவாறு, சீடர்  பதில் கூறினார்,    “ இல்லவே இல்லை  குருஜி. நான் ஏழு நாட்கள் மட்டுமே  உயிரோடு இருக்கப் போகிறேன். நான்  உபயோகமற்ற  நடத்தையால்,   அந்த நேரத்தை  எப்படி, நான்  வீணாக்க முடியும்?     அதற்குப் பதிலாக,   என்னுடைய  நேரத்தை  மற்றவர்களை  என்னுடைய  இதயபூர்வமான அன்பால் வாழ்த்திக் கொள்வதையும்,   மேலும் நான்  யாரையெல்லாம்  புண்படச்  செய்தேனோ,   அவர்களிடம்  மன்னிப்புக் கேட்டுக் கொள்வதிலும் என் நேரத்தை   செலவழித்தேன்.    

இதைக் கேட்டவுடன், குரு புன்னகையுடன் கூறினார். “பார்,  இப்போது நீ  என்னுடைய ரகசியத்தை அறிந்து இருப்பாய், அதை  மேலும் அனுபவத்திலும் கூட புரிந்து இருப்பாய்.      நான் எந்த  கணத்திலும்  இறக்கலாம் என்ற உண்மையை  விழிப்புணர்வுடன்  நான்  அறிந்திருந்தும்,   நான் எனது விலை மதிப்புள்ள நேரத்தை  மற்றவர்களுக்கு  கெட்டதைச் செய்வதற்கு ஏன்  வீணாக செலவழிக்க வேண்டும்?       அதற்குப் பதிலாக,   என்னுடைய மிக  அதிகமான நேரங்களில், நான்  என்னுடைய இதயத்தை  எல்லோருக்கும்  திறந்து வைத்துக் கொள்ள முயற்சி  செய்கிறேன்.    

வாழ்க்கை என்பது  மிகவும் குறுகியது.   பிறரை வருத்தம்,  சண்டை, விவாதம்,  மேலும் பொறாமை  இவற்றால்   வேதனை அடையச் செய்து அந்த நேரத்தை  வீணாக்கக் கூடாது.    வாழ்க்கை முழுவதுமே   மன்னித்துக் கொண்டே, சென்று கொண்டே இருக்க வேண்டும்.      வாழ்க்கையின்  உள்ளார்ந்த இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளும் போது,  எந்த சூழ்நிலையிலும்,  அவர்கள்  அமைதியாகத்தான் இருப்பார்கள்.    இது ஏனென்றால்,   அங்கு விவேகம் இருக்கிறது.     வாழ்க்கையில்  ஒவ்வொரு கணத்தையும்  அதுதான் வாழும்  கடைசி கணமாக  இருக்கிறது என்று  வாழ வேண்டும்.  

அந்த சீடர் உடனே புரிந்து கொண்டார்  -- இந்த திட்டம்  முழுவதுமே எதைப் பற்றியது  என்பதையும்,   மேலும் அந்த   ஆழ்ந்த ரகசியத்தையும் கற்றுக் கொண்டார்.    அமைதி  நிறைந்ததும்  அன்பானதுமான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை அந்த நாளில் தெரிந்து கொண்டார். 

பாடம்

வெறுப்புணர்ச்சியை நீக்குவதன்  மூலமாகவே,    அகிலம் அளாவிய  அன்பு அங்கே  வரும்.

1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths