லேபிள்கள்

ஞாயிறு, 29 ஜூன், 2025

இறைவனும் உண்மையும் ஒன்றாகும்

 

நல்லவராக அனைவரும் விரும்புவதால் எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கின்றனர். 

பசித்தவன் இப்போதே சாப்பிட விரும்புவது போல், கடவுள் அருள் கிடைக்க இதுவே சரியான நேரம் என்பதால் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும்.

உலகில் அனைத்தும் அழியும் தன்மையுடையது. குறிப்பாக, நமக்கு வேண்டப்பட்டவர்கள், நண்பர்கள், செல்வம் போன்றவை அழிந்துவிடும்.

 ஆனால், உண்மை மட்டும் உறுதியாக நிற்கிறது. அந்த உண்மையும் இறைவனும் ஒன்றாகும்.

தளர்வும், சோர்வும், சலிப்பும் முதுமையை விளைவிக்கிறது என்றால், உறுதியும், ஊக்கமும், உழைப்பும் இளமையைப் பாதுகாக்கிறது.

உயர்வைத் தேடி அலைகிறவனுக்கு அது கிடைப்பதில்லை. உயர்வு என்பது தன்னை அடையும் தகுதியுடையவனைத் தேடிச் சென்று அவனை உயர்த்துகிறது.

உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களை அகற்றினால் மனதிலுள்ள கெட்ட நோய் அகன்று வெளியுலகில் நல்ல தொடர்பு கிடைக்கும்.

உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால் மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்ட பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். 

ஒழுக்கமாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என கருதுகிறீர்களோ அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். 

பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும். 

மனம் சலிக்காமல்


இறைநெறியில் ஆழ்ந்து வருபவனுக்கு செல்வம் சேரும். புத்திரர்களும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல பதவி கிடைக்கும். எமன் கூட அணுகாத நிலை ஏற்படும். உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வி ஞானமும், மெய்ஞ்ஞானமும் கைகூடும். பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து நல்லநீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால் அறிவு தெளிவடையும்.

வாழ்க வளமுடன்


கேள்விகளைக் கேட்பதற்கு முன், கடமைகளை செய்ய கற்றுக் கொள்ளுங்கள்

 


நீங்கள் கேள்விகளைக் கேட்பதற்கு முன், கடமைகளை செய்ய கற்றுக் கொள்ளுங்கள். 

ஆனால், கடமைகளை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் பொழுது, நாம் பொதுவாக எழுப்பும் கேள்வி எதற்காக?' என்பதுதான். 

ஏன்?' என்ற கேள்வியை எழுப்புவது எளிது. ஆனால், கடமையைச் செய்தாக வேண்டும் என்ற தர்மத்தின் அடிப்படையை மறந்து விடுகிறோம் என்பதே நிஜம். 

நமக்கு விருப்பமானவற்றை மட்டுமே செய்கிறோம், விருப்பமில்லாதவற்றை செய்வதில்லை. எனவே, நம்முடைய பகுத்தறியும் ஆற்றல் குறையுள்ளதாக மாறுகிறது. இதன் காரணமாக வாழ்க்கையில் சோதனைகள் எழும்பொழுது சரியான முடிவுகளை எடுக்கவும், திருத்தமாக செயல்படவும், நம்மால் முடிவதில்லை. 

இதற்கு காரணம், தர்மத்திற்கு ஏற்ற வகையில் வாழ நாம் என்றுமே முயலாதது தான். மாறாக நம்முடைய சொந்த சபலங்களுக்கு அடிமைப்பட்டு மனம் போனபடி நாம் வாழ்கிறோம். 

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை திறந்த மனத்துடன் படித்து, அவற்றிற்கு கீழ்ப்படிந்து நடக்க முதலில் கற்றோமானால், நம் மனம் நாளடைவில் தூய்மையடையும், அப்பொழுது, தர்மத்தின் கோட்பாடுகளை நாம் புரிந்து கொள்வோம்.

ஆன்மிக வாழ்க்கைக்கு நன்னடத்தை மிகவும் அவசியமான ஒன்று. 

நீங்கள் பலவித சடங்குகளை செய்திருக்கலாம், ஆலயங்கள் பல எழுப்பியிருக்கலாம், அல்லது ஆன்மிக சொற்பொழிவு ஆற்றியிருக்கலாம். ஆயினும் நடத்தை முறையற்றதாக இருப்பின், இவற்றால் பயனில்லை.

வாழ்க வளமுடன்

என் அன்பான இனிய காலை வணக்கம் 


சனி, 28 ஜூன், 2025

மூத்தவர்களுக்கு இசையின் ஆரோக்கிய நன்மைகள் Music Health Benefits For Seniors


 மனது பாரமாக இருக்கும்போது நல்ல இசையைக் கேட்டால் கொஞ்சம் இதமாவதை உணர்ந்திருக்கிறீர்களா?


இயற்கைச் சூழலில் பறவைகள் எழுப்பும் ஒலியும் அருவி நீரின் சத்தமும் ஒருவித உற்சாகத்தைக் கொடுப்பதை அனுபவித்திருக்கிறீர்களா?

ஒலிக்கும் மனநலனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதன் அடிப்படையில்தான் ஒலி சிகிச்சை என்றே ஒன்று பின்பற்றப்படுகிறது. ஒலியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சை சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது.

ஒலி சிகிச்சை நிபுணரான சுனிதி ரமேஷ் சவுண்டு தெரபி செயல்படும் முறை பற்றி நமக்கு விளக்கினார்.

``இந்த சவுண்டு தெரபி தியானம் மாதிரி செயல்படுகிறது. இது உங்கள் கிளர்ச்சியுற்ற நரம்புகளை அமைதிப்படுத்தி உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறது. உடம்பு வலிக்கு வெதுவெதுப்பான குளியல் எடுத்துக்கொள்வது போல இந்த சவுண்ட் பாத் மன வலிக்கு இதமாக மாறுகிறது. இசைக்கருவிகள், இசை ஊடகங்களைப் பயன்படுத்தி மனதுக்கும் உடலுக்கும் முழுமையான நிம்மதியைத் தர உதவுகிறது. இதில் இசைக் கிண்ணங்கள் மற்றும் கோங் எனப்படும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சவுண்ட் பாத் எனப்படும் ஒலிக் குளியல் மன அழுத்தத்தை அதன் வேரிலிருந்து நீக்க உதவியாக இருக்கும்.

இசைக் குளியல்

சவுண்ட் பாத் எடுத்துக்கொள்ள எந்த வித விதிகளும் இல்லை. சாதாரணமாக நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ நிதானமாக கண்களை மூடிக்கொண்டு அறையில் வெளிப்படும் ஒலிகள் மற்றும் இசையை காதால் கேட்டு ரசிக்க வேண்டும். சில நேரங்களில் அறையில் இனிமையான ஒலிகளை அறிமுகப்படுத்த ஃபோர்க்ஸ், கோங்ஸ், படிக கிண்ணங்கள் மற்றும் சைம்ஸ் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. சில மருத்துவ சிகிச்சையாளர்கள் தங்கள் சொந்தக் குரலில் இசையை எழுப்பிக்கூட இந்தச் சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.

Music
Music

உணர்வுகளைத் தூண்டும்

இந்த இசைக் குளியலில் நீங்கள் மனதார நனையும்போது, உங்கள் உணர்வுகள் யாவும் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இசைத்தட்டுகள், ஸ்பீக்கர், கோங்ஸ் மற்றும் பிற கருவிகளின் பயன்பாட்டின் மூலம், உருவாக்கப்பட்ட அதிர்வுகள் உங்களைச் சுற்றிலும் மன அமைதி, சமநிலை மற்றும் தளர்வு உணர்வைத் தருகின்றன. இதனால் மன ரீதியான பிரச்னைகளைக் குணப்படுத்துவதற்கான சூழல்களும் மேம்படுகின்றன.

இது உடலைப் படிப்படியாகத் தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. இப்படி இசை தியானம் செய்யும்போது தூக்கப் பிரச்னை, நினைவாற்றல் மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் பிற தூண்டுதல்களைச் சமநிலைப்படுத்தி, நீண்ட கால நோய்கள் நம்மை ஆட்கொள்ளாமல், மன அழுத்தத்தைப் போக்குகிறது. இதயம் மற்றும் சுவாசத்தின் வேகத்தை நிதானப்படுத்தி உடலில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது.

Music

யது தடை இல்லை" என்றார் ஒலி சிகிச்சை நிபுணரான சுனிதி ரமேஷ்.

இப்படி மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு மாற்று வடிவம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது ஒரு பாரம்பர்ய மருத்துவ முறையின் வடிவமாக இருப்பதால் நிபுணர்களும் இந்த முறையைப் பரிந்துரைக்கின்றனர். எனவே, இனி மன அழுத்தம் என்றால் பயந்து ஓடாதீர்கள். இசையால் விரட்டுங்கள்; உங்கள் மனமும் உடலும் இதமாக இசையில் நனையட்டும்.

Cyber Crime - Retired Employee - OTP sharing experience; சைபர் குற்றம் - ஓய்வு பெற்ற ஊழியர் - OTP பகிர்வு அனுபவம்

 



ஒரு நண்பர் சமீபத்தில் ரிட்டையர் ஆனார். . 

அப்போது கிடைத்த 25 லட்சத்தை வங்கியில் மனைவியோடு  உள்ள Joint அக்கௌண்டில் டெபாசிட் செய்தார். 

ATM மற்றும் PIN நம்பர்களை மனைவியுடன் பகிர்ந்து கொண்டார்.  

ஒரு நாள் மாலையில் நண்பர்களுடன் சைபர் Crime பற்றி  பூங்காவில் அரட்டை அடிக்கும் போது தன்னோட மொபைல் போனை வீட்டில் மறந்து விட்டு வந்ததை உணர்ந்தார்.

பதட்டத்துடன் வீடு திரும்பிய நண்பர், போன் பத்திரமாக டேபிள்ல இருந்தது கண்டு மகிழ்ந்தார்.  

மனைவியிடம் " ஏதாவது போன் வந்திச்சா  ?"  "ஆமாம் நம்ம பேங்க் மேனேஜர் பேசினார் . ஒரு OTP வரும் - அந்த நம்பரை சொல்லுங்க ன்னு கேட்டாரு." "குடுத்தியா?"  "உடனே கொடுத்துட்டேன் ".

அலறியடித்து போனில் தன் நெட் பேங்க் அக்கவுண்டை  துழாவினார் . நல்ல வேளையாக  பணம் பறி போகவில்லை.  

 " என்ன நம்பர் குடுத்தே "? " 6460 ன்னு OTP  வந்திருந்துது - நம்மோடது தான் Joint அக்கௌண்டாச்சே - அதனாலே 6460 ல... என் பாதி 3230 ன்னு நம்பர் குடுத்தேன்.  எனக்குத் தெரியாத Nett  பாங்கிங்கா "😀  அப்பாடா 😂😂😂   படித்ததில்_சிரித்தது.

தமிழக மாநில அரசு சம்பளத் தொகுப்பு (SGSP) கணக்கு SGSP சிறப்பம்சங்கள்



அரசு பணியாளர் கணக்கு வைத்துள்ள அதே வங்கி கிளையில் மனைவி மற்றும் குழந்தைகளும் கணக்கு வைத்திருப்பவர்கள் Risky Form கொடுத்தால் அரசு ஊழியர் பெறும் அதே சலுகைகளை மனைவியும் குழந்தைகளும் பெறமுடியும்.


SGSP கணக்கின் முக்கிய நன்மைகள்:
  • கடன்களில் சலுகைகள்:
    வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், கார் கடன்கள் மற்றும் கல்விக் கடன்களுக்கு முன்னுரிமை வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்களில் தள்ளுபடிகள் (50% வரை) வழங்கப்படுகின்றன. 
  • காப்பீடு:
    இலவச தனிநபர்/விமான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. 
  • பரிவர்த்தனைகள்:
    SBI மற்றும் பிற வங்கிகளின் ATM-களில் வரம்பற்ற பணப் பரிவர்த்தனைகள் செய்யலாம். 
  • ஆன்லைன் பரிவர்த்தனைகள்:
    ஆன்லைன் RTGS/NEFT கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. 
  • ATM/Debit Card:
    இலவச ATM/Debit Card வழங்கப்படுகிறது. 
  • Demat கணக்கு:
    ஆன்லைன் வர்த்தகம் மற்றும் Demat கணக்குகளைத் திறக்கும் வசதி உள்ளது. 
  • பிற:
    இ-MOD-களை (மல்டி ஆப்ஷன் டெபாசிட்கள்) உருவாக்க மற்றும் அதிக வட்டியைப் பெற ஆட்டோ-ஸ்வீப் வசதி உள்ளது. 

திருமணம் செய்து கொள்வது எப்படி இருக்கும்? what's it like to be married


திருமண வாழ்க்கை என்பது அன்பான பந்தம், அதில் மகிழ்ச்சி, அரவணைப்பு, சில சமயங்களில் சிறு சிறு சண்டைகள் மற்றும் சமரசங்கள் என அனைத்தும் கலந்த ஒரு பயணமாகும். 
இது தனிநபர்களின் தேர்வாக அமைய வேண்டும் என்றும், சமுதாயக் கடமையாகக் கருதப்படக் கூடாது.
திருமண வாழ்க்கை வெற்றியடைய, வாழ்க்கைத் துணையுடன் அன்பு, புரிதல் மற்றும் பரஸ்பர ஆதரவு அவசியம். 
திருமண வாழ்க்கை அனுபவங்கள்:
  • அன்பும் உறவும்:
    திருமணம் என்பது இரண்டு நபர்களை ஆயுள் முழுக்க இணைக்கும் அன்பு பந்தம், இதில் அன்பு, மகிழ்ச்சி, இனிமையான தருணங்கள், அரவணைப்பு, ஊடல், கொஞ்சல், குமுறல் என எல்லாமே இருக்கும். 
  • தனிப்பட்டத் தேர்வு:
    திருமணம் என்பது சமூக நியமமாக இல்லாமல், ஒவ்வொரு தனிநபரின் தேவையின் அடிப்படையிலான தேர்வாக இருக்க வேண்டும். 
  • பரஸ்பர ஆதரவு:
    வாழ்க்கைத் துணையிடம் இருந்து உடல்ரீதியான ஆதரவு மட்டுமல்லாமல், பல்வேறு நிலையிலான ஆதரவுகளும், ஒரு சமநிலையான சூழலும் தேவை. 


  • சவால்கள் மற்றும் தீர்வுகள்:
    வெற்றிகரமான திருமண உறவுக்கு, முற்றிலும் சரியான ஒரு நபர் அல்லாமல், பரஸ்பர புரிதலும் ஒத்துழைப்பும் தேவை. 
  • சமூக மற்றும் குடும்பப் பின்னணி:
    திருமணங்கள் இரு குடும்பங்களின் இணைப்பாகவும், அவர்களின் மதிப்புகள் மற்றும் மரபுகளை ஒன்றிணைப்பதாகவும் அமையும். 
  • உணவுப் பழக்கம் போன்ற சவால்கள்:
    அசைவ உணவு உண்பவர் சைவ குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது சில கலாச்சார மாற்றங்களையும், தனிப்பட்ட அனுபவங்களையும் எதிர்கொள்ள நேரிடும். 

 

வெள்ளி, 27 ஜூன், 2025

உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள், உடல் உங்களை கவனித்துக் கொள்ளும் Take Care of your Bode, Body will take Care of You

 


உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள், உடல் உங்களை கவனித்துக் கொள்ளும் 

Take Care of your Body, Body will take Care of You



உங்கள் உடலை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம், ஏனென்றால் ஆரோக்கியமான உடல் ஆரோக்கியமான மனதை ஆதரிக்கிறது மற்றும் நீங்கள் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது, ஏனெனில் நீங்கள் வாழ வேண்டிய ஒரே இடம் உடல் மட்டுமே 
இது சரியான ஊட்டச்சத்து, போதுமான தூக்கம், வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை மற்றும் உங்கள் உடல் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துதல் போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் கலவையை உள்ளடக்கியது.   
உங்கள் உடலை எவ்வாறு பராமரிப்பது:
  • உங்கள் உடலுக்கு ஊட்டமளிக்கவும்:
    பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீரான உணவை உண்ணுங்கள், அதே நேரத்தில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், உப்பு மற்றும் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை கட்டுப்படுத்துங்கள்.   
  • தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்:
    ஒரு இரவுக்கு 7 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட தூக்கத்தை இலக்காகக் கொண்டு, சீரான தூக்க அட்டவணையை வகுத்துக் கொள்ளுங்கள்.   
  • சுறுசுறுப்பாக இருங்கள்:
    வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்; சிறிய அளவிலான அசைவுகள் கூட காலப்போக்கில் அதிகரிக்கும், மேலும் நீங்கள் வாரத்திற்கு குறைந்தது 2.5 மணிநேர செயல்பாட்டை இலக்காகக் கொள்ளலாம்.   
  • மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்:
    மன அழுத்தம் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும், எனவே ஓய்வெடுக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் வழிகளைக் கண்டுபிடிப்பது முக்கியம்.   
  • வழக்கமான சுகாதார பரிசோதனைகள்:
    வழக்கமான மருத்துவ சந்திப்புகள், பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகளைப் பெறுங்கள்.   
  • தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தவிர்க்கவும்:
    புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்க்கவும்.   
  • உங்கள் உடலைக் கேளுங்கள்:
    ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் நிலைத்தன்மை நீண்ட கால நன்மைகளை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொண்டு, உங்கள் உடலின் தேவைகள் மற்றும் சமிக்ஞைகளுக்கு கவனம் செலுத்துங்கள்.   
  • மனநிறைவு:
    நினைவாற்றலைப் பயிற்சி செய்வது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும் மற்றும் உங்கள் உடலின் திறன்களைப் பாராட்ட உதவும்.   

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவில் முன்நேரத்தில் துாங்கச் செல்வதும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.

 



கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.

நல்ல பழக்கங்களின் மூலம் மனதில் எழும் தீய ஆசைகளைக் கட்டுப்படுத்தவோ அகற்றவோ முடியும்.

மனதுடன் போர் நடத்தாதீர்கள். தியானத்தால் ஒருநிலைப்படுத்துங்கள். இதுவே மகிழ்ச்சிக்கான வழி.

பால், பழம் போன்ற சாத்வீக உணவை சாப்பிட்டால் மனதில் அமைதியும், ஆனந்தமும் குடியிருக்கும்.

தண்ணீரில் உப்பைக் கரைப்பது போல மனம் எப்போதும் இறைச் சிந்தனையிலேயே இருக்கட்டும்.

ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.



பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள்.

வாரம் ஒருமுறையாவது கோவிலுக்குச் செல்லுங்கள். மனம் ஒன்றி பக்தியில் ஈடுபடுங்கள்.

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவில் முன்நேரத்தில் துாங்கச் செல்வதும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.

வாழ்க வளமுடன்

குறள் விளக்கம்; நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு

 



குறள் எண்:- 520

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு

விளக்கம்:-

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

"நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு" என்ற குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு,

 "Let the king daily inspect the work of his servants; if they err not, the world will not err," 

அல்லது 

"The world will not go wrong, so long as the king's servants do not err," 

என்பதாகும். இதன் பொருள், மன்னன் தன் கீழ் பணிபுரிபவர்களின் செயல்களை தினமும் ஆராய வேண்டும்; அவ்வாறு அவர்கள் தவறுகள் செய்யாமல் இருந்தால், உலகம் சீராக இயங்கும் என்பதாகும். 


Kanjeevaram Natarajan Annadurai

  Arignar Anna, whose full name is Kanjeevaram Natarajan Annadurai, was a prominent Indian politician, writer, and leader in the Dravidian m...