லேபிள்கள்

வெள்ளி, 27 ஜூன், 2025

உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு. அது கடவுளிடம் பயமும் பக்தியும் கொண்டு நல்லவனாக வாழ்வது மட்டுமே.

 



உண்மையோடும், அன்போடும் வாழ்வது தான் ஆன்மிக வாழ்வின் ரகசியம்.

 நற்செயல் என்ற விளைநிலத்தைச் சீர்படுத்தி, அதில் இறைவனின் திருநாமம் என்னும் விதையைத் தூவுங்கள். உள்ளத்தில் ஆண்டவன் திருநாமம் என்னும் தீபம் எரிந்து கொண்டிருந்தால் வேறு சிந்தனை ஏன் வரப்போகிறது?

 சிந்திப்பதாக இருந்தால் நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும். 

 பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை. ஆசையிலும் பெரிய தீமை இல்லை. கருணையிலும் சிறந்த அறம் கிடையாது. 

மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் வேறில்லை. 

ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கிறார்கள். ஆனால், மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதனால் இறைவனை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். சத்தியமாகிய பரம்பொருளை சிந்தித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கிறது. உலகில் வாழ்வதற்கு ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டு. அது கடவுளிடம் பயமும் பக்தியும் கொண்டு நல்லவனாக வாழ்வது மட்டுமே. 

அறம் என்னும் நீரில் நீராடி, வாய்மை என்ற வாசனைத் திரவியத்தை பூசிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முகம் பேரொளியால் பிரகாசம் பெற்று விளங்கும்.




இறைவன் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாதவன். முடிவில்லாத பெருமையைக் கொண்டவன். மனம்,வாக்கு,காயத்தால் அறிய இயலாதவன். அவனே நமக்கு அருள் செய்வதற்காக தன்னைக் குறைத்துக் கொள்கிறான்.

வாய்மை, நீதி தவறாத முறையில் உணவைத் தேடுதல், இறைவனின் பெயரால் தானம் செய்தல், மனத்தூய்மைக்கு முயற்சித்தல், கடவுளை வணங்குதல் ஆகிய ஐந்திற்காகவும் கடவுளை நாளும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் இறைவனின் பெயரை உச்சரிக்கவே செய்கிறார்கள். ஆனால் மனத்தூய்மை இல்லாமல் உச்சரிப்பதால் மட்டும் இறைவனை அடைய இயலாது.

நம் மனம் மதம் பிடித்த யானையைப் போன்றது. பந்த பாசங்களினாலும், மரண பயத்தினாலும் உயிர் அலைந்து திரிகிறது. இதிலிருந்து விடுபட இறையருள் ஒன்றே நமக்குத் துணை செய்யும்.

சாம்ராஜ்யம், செல்வம், அழகு, பெருமை, இளமை இவை ஐந்தும் உயிர் இறை ஞானம் பெற விடமால் தடுக்கும் திருடர்கள் ஆவர்.

உலகத்தின் செல்வம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது. 

வாழ்க வளமுடன்

என் அன்பான இனிய காலை வணக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...