லேபிள்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2025

எப்போது பெண்ணானவள் பேயாக கூட மாற்ற படுகிறாள்

 


பிறக்கும் போதே எந்த பெண்ணும் கொடுமைக்காரியாக கோபக்காரியாக பேராசைக்காரியாக அழுமூஞ்சியாக பிறப்பதில்லை 


சாதாரண எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறும் போதும் 

நியாயமான ஆசைகள் நிராசைகளாக போகும் போதும் 

அவர் சுய கௌரவம் பாதிக்கபடும் போதும்

தனக்கு மனம் விட்டு பேச யாரும் இல்லாதபோதும் தான் 

செய்யாத குற்றத்திற்காக குற்றவாளியாக நடத்தப்படும் போதும் 

அவளின் தியாகங்கள் மதிக்கபடாதபோதும் 

அவளின் எண்ணங்கள் புரிந்து கொள்ள முயற்சிகள் கூட மறுக்கபடும் போதும்

அவளின் பெரு முயற்சிகள் செய்து செயலுக்கு

 சின்ன சின்ன பாராட்டுகள் மறுக்கபடும் போதும் 

அவள் அழகை அவளுடையவன் ரசிக்க மறக்கும் போதும் 

அவளுடைய நியாயமான தேவைகள் சந்திக்கப் படாத போதும் 

பெண்ணானவள் பேயாக கூட மாற்ற படுகிறாள்.


இங்கே கவனிக்கவும்

அவள் மாறவில்லை 

மாற்ற படுகிறாள் 

ஏனெனில் 

இயற்கையில் எல்லா பெண்களும் தேவதைகளே...🌹

1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths